அமைச்சு பதவி வேண்டும் என்று எதிர்பார்த்தது இல்லை

0
790
Parliament member Arumugan Thondaman comment Ministry post

(Parliament member Arumugan Thondaman comment Ministry post)
அமைச்சு பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மக்களுக்கான பணிகள் தொடர்ந்துவரும் என்பதை கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான சேவையை தொடர்ந்தே செய்து கொண்டுவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொட்டகலையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மதத்தின் இந்த பண்டிகை நிகழ்வுக்காக மரியாதை கொடுத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் 7 ஆம் திகதி மே தின நிகழ்வை பேரணியுடனும், பொதுக் கூட்டத்துடனும் நுவரெலியாவில் நடத்தவுள்ளது.

அதேவேளை, இன்றைய தினம் தொழிலாளர்களுக்குரிய தினமானது. இதனையொட்டி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் மேதினம் என்ற வகையில் நாமும் இந்த மேதின நிகழ்வை கொண்டாடினோம்.

இன்று அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்தில் கொண்டு வரப்படுகின்றது. இதில் உங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்குமா அல்லது தருவதாக கூறியிருக்கின்றார்களா என ஊடகவியலாளர் கேட்டபோது, அவர் பதிலளித்ததாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கு சேவை செய்ய அமைச்சு பதவி தான் வேண்டும் என்பதை எதிர்பார்த்து இதுவரையும் மக்களுக்கு சேவை செய்யவில்லை.

மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து வருவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் இதற்கு ஒரு சான்றாக அமைந்திருந்தது என்றும் பதிலளித்துள்ளார்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Parliament member Arumugan Thondaman comment Ministry post