மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

0
949
Happy news Malaysian voters, Happy news Malaysian, malaysia 14 election, election, malaysia tamil news,

Happy news Malaysian voters }

மலேசியாவில் எதிர் வரும் 9ஆம் திகதி நடைபெறவிருக்கும் 14ஆவது பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் கோலாலம்பூர்-கோலசிலங்கூர் (லாத்தார்) நெடுஞ்சாலையில் காலை 8.௦௦ மணி முதல் மாலை மணி 5.00 வரையில் வாகனமோட்டிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லாத்தார் நெடுஞ்சாலையின் நிர்வாக இயக்குநர் டத்தோ முஹம்மட் ரஃபி சேக்கு நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகையில் வாக்களிப்பு நாளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வெளியே வரும் நோக்கில் இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

லாத்தார் நெடுஞ்சாலை மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளிலுள்ள சிறிய நகரங்களுக்கு செல்வதற்கான நுழைவாயிலாக மட்டும் இல்லாமல் செலாயாங், ரவாங், ஷா ஆலம், சுங்கை பூலோ முதலான பெரிய நகரங்களுக்கும் செல்லக்கூடியதாக உள்ளது.

மே 9இல் எங்களது நடவடிக்கை குழு அந்த நெடுஞ்சாலையில் வாகனங்களின் நகர்வுகளை கண்காணிப்பார்கள். அதுமட்டுமின்றி, டச் என் கோ பிரிவிற்கான சாலைகள் 24 மணி நேரமும் இயங்கும் என ரஃபி சேக்கு கூறியுள்ளார்.

 

<<MOST RELATED CINEMA NEWS>>

*துன் மகாதீரை மருத்துவமனைக்கு அனுப்புவதா? எதிர்கட்சியின் சதி வேலை அம்பலம்..!

*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?

*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு

*தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாராப்பான் இடையில்தான் போட்டியா..?

*தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யான தகவல்களை பரப்புவது எதிர்க்கட்சிகள்: நஜிப் அறிவிப்பு..!

<<Tamil News Groups Websites>>