கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!

0
1639
chris gayle royal challengers bangalore news Tamil

(chris gayle royal challengers bangalore news Tamil)

மே.தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில். இருபதுக்கு-20 போட்டிகளில் அதிரடி காட்டி வரும் இவர் இதுவரை 21 சதங்கள் விளாசி அனைத்து துடுப்பாட்ட வீரர்களுக்கு முன்னிலையில் உள்ளார்.

இவர் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் கடந்த சீசன்களில் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார். எனினும் இம்முறை கெயிலை பெங்களூர் அணி வாங்கவில்லை.

நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். ஏலத்திலும் கெயிலுக்கான மதிப்பு குறைந்திருந்தமையை நாம் அவதானிக்க முடிந்திருந்தது. ஏலத்தின் முதல் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்து பின்னர் இடம்பெற்ற கடைசி சுற்று ஏலத்தின் போதே அவருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

எனினும் பெங்களூர் அணி ஏலத்தின் போது தன்னை வாங்காமல் விட்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்ததாக கிரிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தனது மனக்கவலையை கிரிஸ் கெயில் வெளியிட்டுள்ளார்.

“பெங்களூர் அணி ஐ.எ.எல். ஏலத்தில் தன்னை எடுக்கவில்லை என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏலத்திற்கு முன்னர் பெங்களூர் அணி என்னுடன் தொடர்பு கொண்டு, மீண்டும் என்னை அணியில் எடுப்பதாக கூறியது. நானும் அணியில் எடுப்பார்கள் என எதிர்பார்த்தேன். எனினும் அதற்கு பின்னர் என்னுடன் அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் என்னை புறக்கணிப்பதை நான் புரிந்துக்கொண்டடேன்.

பின்னர் ஏலத்தின் போதும் என்னை எந்த அணிகளும் எடுக்கவில்லை. முதல் இரண்டு சுற்றுகளில் என்னை எடுக்காததால், ஐ.பி.எல். வாழ்க்கை முடிந்தது என்று எண்ணினேன். இருபதுக்கு-20 போட்டிகளில் 21 சதங்கள் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளேன். அதுமட்டுமில்லாமல் நடைபெற்ற முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் போன்றவற்றிலும் சிறப்பாக செயற்பட்டேன். எனினும் எனக்கு வாய்ப்பில்லை எனும் போது சற்று மனவேதனை அடைந்தேன்.

எவ்வாறாயினும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி என்னை வாங்கியது. எனக்கு ஒரு வாய்ப்பை தந்துள்ளனர். நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>

chris gayle royal challengers bangalore news Tamil