இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..!

0
838
Today horoscope 30-04-2018

மேஷ ராசி நேயர்களே !
பேச்சில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம் கவனம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் வீட்டுச் செலவுக்கு சேமிப்பை கரைப்பர். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

ரிஷப ராசி நேயர்களே !
பொதுநல நோக்குடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் தோழியருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவர்.

மிதுனம் ராசி நேயர்களே !
சுய நலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டி வருவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்களுக்கு இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும்.

கடக ராசி நேயர்களே !
உங்களின் நியாயமான பேச்சை சிலர் ஏற்க தயங்குவர். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் இரவலாக நகை, பணம் கொடுக்க வாங்க வேண்டாம்.

சிம்ம ராசி நேயர்களே !
முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக பயணம் மேற்கொள்வர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.

கன்னி ராசி நேயர்களே !
பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். தெய்வ அருள் பலம் துணை நிற்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் உதவி உண்டு.

துலாம் ராசி நேயர்களே !
வாழ்வில் இனிய அனுபவம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
பேச்சிலும், செயலிலும் திறமை வெளிப்படும். எதிரி இடம்மாறி போகிற சூழல் உருவாகும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும்.மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே !
குடும்பத்தினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

மகர ராசி நேயர்களே !
வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

கும்பம் ராசி நேயர்களே !
மனதில் இனம் புரியாத தயக்கம் உருவாகி மறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்க்கவும்.

மீனம் ராசி நேயர்களே !
தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். தடைகள் அகலும். கைவிட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

1 ம் எண் :

சூரியன் 1,10,19,28ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 1 ம் எண் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த மாதம் அரசு வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல முன்னேற்றமும் நம்பிக்கையும் உண்டு. இட மாற்றம் எதிர்பார்ப்போருக்கு சோதனை தரும். கணவன் மனைவி முரண்பட்ட கருத்துக்கள் உண்டு. உறவினர் உறவில் விரிசல் கவலை தரும். மாணவர்களுக்கு சிறப்பான நேரம். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் உண்டு. விருந்து உபசாரங்கள், நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : மஞ்சள் .
எண் : 3
கிழமை : வியாழன்
தெய்வம் : ஆஞ்சநேயர்.

2 ம் எண் :

சந்திரன் : 2,11,20,29 தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 2 ம் எண் என்றால் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் முயற்சிகள் செயல்வடிவம் பெறுவதில் தாமதமாகும்.வேற்று இனத்தவரால், அந்நியரால் அனுகூலம் உண்டு. பயணம் புதிய அனுபவமும் வெற்றியும் தரும். வாகன யோகம் உண்டு. பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும் . சகோதரர் வழியில் நன்மை உண்டு. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : சிகப்பு .
எண் : 9.
கிழமை : செவ்வாய்
தெய்வம் : முருக பெருமான்.

3 ம் எண் :

குரு : 3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 3 ம் எண் என்றால் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம், உழைப்பு ரெட்டிப்பாகும். கிடைத்த பணம் விரயமாகும் நேரம். தற்பெருமை சரிவை சந்திக்கும். பொறுப்பை தட்டிக்கழிக்காமல் பொறுமை காத்தால் குறுகிய கால தடைக்கு பின் நன்மை உண்டு. மாணவர்களுக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி தற்காலிகமானது மட்டுமே. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : ஆரஞ்சு.
எண்கள் : 1
கிழமை : ஞாயிறு
தெய்வம் : சிவ பெருமான்.

4 ம் எண் :

ராகு : 4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 4 ம் எண் என்றால் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உங்களுக்கு எதிர்பாலினத்தவரால் சங்கடம் உண்டு. காதல் கசக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு தாமதம் உண்டு. வாகன வகையில் செலவு உண்டு. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வசிப்பிட மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை நன்மை தரும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெள்ளி நிறம், பச்சை..
எண்கள் : 5.
கிழமை : புதன்
தெய்வம் : ஐயப்பன்.

5 ம் எண் :

புதன் : 5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 5 ம் எண் என்றால் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் புதிய சிந்தனை நல்ல பலன் தரும்.நண்பர்களால் நன்மை உண்டு. வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு மேலும் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களிடம் குறைகண்டுபிடிப்பதால் அவர்களை திருப்தி படுத்த முடியாமல் திணறுவீர்கள். பணம் சிக்கனம் குறித்த சிந்தனை பலன் தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : நீலம் .
எண்கள் : 8
கிழமை : சனி .
தெய்வம் : மகா விஷ்ணு.

6 ம் எண் :

சுக்கிரன் : 6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 6 ம் எண் என்றால் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் வேலை வாய்ப்பு , வியாபாரம், புதிய தொழில் முயற்சி, ஆகிய அனைத்திலுமே வெற்றி உண்டு. விருந்து நிகழ்ச்சி, உறவினர் வருகை என பல சாதகமான மாறுதல் உண்டு. திருமண பேச்சு சாதகமாகும்.சிறப்பான பொருளாதார மேன்மை உண்டு. புதிய வீடு, சொத்து வாங்கும் நேரம்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெண்மை.
எண்கள் : 4
கிழமை : திங்கள்
தெய்வம் : துர்கை அம்மன்

7 ம் எண் :

கேது : 7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 7 ம் எண் என்றால் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் தேங்கி நின்ற வழக்கு சாதகமாக முடியும்.பயணங்களால் நன்மை உண்டு. புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். வாகன வகையில் மாற்றமும் செலவும் உண்டு. கடன் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நலம். உறவினர் தவிர அனைத்து தரப்பு ஆதரவும் உண்டு. புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : பச்சை
எண்கள் : 5
கிழமை : புதன்.
தெய்வம் : விநாயகர்

8 ம் எண் :

சனி : 8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 8 ம் என்றால் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் பணவரவு மகிழ்ச்சி தரும் .சகோதரர் வழியில் சச்சரவு உண்டு.. மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.. வியாபார வெற்றி உண்டு. அந்நியரால் இடையூறு உண்டு,கவனம் தேவை. பணம் தொடர்பான விஷயங்களில் ஜாமீன், உத்தரவாதம் தராமல் இருப்பது நலம்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : மஞ்சள்.
எண்கள் : 3
கிழமை : வியாழன்.
தெய்வம் : ஐயப்பன்,

9 ம் எண் :

செவ்வாய் : 9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 9 ம் என்றால் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உத்தியோக மேன்மை கிடைக்கும். பூமி யோகம் உண்டு. பரம்பரை சொத்து வழக்கு சாதகமாக முடியும். விளையாட்டு துறை, அரசியல், அரசு வேலையில் உள்ளவர்களுக்கு வெற்றியும் நல்ல முன்னேற்றமும் உண்டு. வாகன யோகமும் பண வரவும் மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு சிறப்பான நேரம் இது,
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெண்மை,பச்சை.
எண்கள் : 6
கிழமை : வெள்ளி.
தெய்வம்.: ரங்கநாதர்

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்