தமிழ் அரசியல் தலைமைகள், அரசாங்கத்தை பாதுகாப்பதாக குற்றச்சாட்டு

0
675
Relatives disappeared Accused Tamil National Alliance

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என எதிர்பார்த்த தமிழ் அரசியல் தலைமைகள், அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் ஏ9 பிரதான வீதிக்கும் அருகில் ஒருவருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் தலைமைகள், அரசாங்கத்திற்கு நெருக்கடிக்கு ஏற்படுகின்ற போது அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவு தேவைப்படுகின்ற போது நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வருகின்றனர்.

நாட்டிற்குள் மட்டுமன்றி நாட்டிற்கு வெளியே சென்றும் தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

அத்துடன், தம்மை வீதியில் விட்டவர்கள் இன்று வீடுகளில் நிம்மதியாக உறங்குவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :