ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யைகள் அரச மரியாதையுடன் இடம்பெறும்

0
757
government decided provide state patronage funeral Lester James Peiris

காலம்சென்ற சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி சடங்கு அரச அனுசரனையுடன் இடம்பெறவுள்ளது.

இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது செயலாளருக்கு விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று இரவு தனது 99 ஆவது வயதில் காலமானார்.

1919ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராக செயற்பட்டு பின்னர் திரைத்துறையில் பிரவேசித்திருந்தார்.

1956ஆம் ஆண்டு இவரது முதலாவது திரைப்படமான ‘ரேகாவ’ திரைப்படம் வெளியாகியது.

2003ஆம் ஆண்டு டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :