இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..!

0
773
Today horoscope 29-04-2018

மேஷ ராசி நேயர்களே !
முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். திட்ட மிட்ட காரியத்தை செய்து முடிப்பதில் சிறு தடை ஏற்படலாம். உத்தியோக மாற்றம் உண்டு.

ரிஷப ராசி நேயர்களே !
புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பக்குவமாகப் பேசுவதன் மூலம் பலரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.

மிதுனம் ராசி நேயர்களே !
வழக்குகள் சாதகமாக முடியும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். எதிர்பார்த்தபடியே பணம் வந்து சேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.

கடக ராசி நேயர்களே !
வரவு இருமடங்காகும் நாள். மனக்குழப்பம் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே !
கவலைகள் தீரும் நாள். கடன்கள் வசூலாகும். ஆச்சர்யப்படத்தக்க சம்பவங் கள் அடுத்தடுத்து நடைபெறலாம். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். வாங்கல் கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே !
போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை அக்கறை செலுத்தாத நண்பர்கள் இப்போது உங்களைத் தேடி வருவர். வியாபார விருத்தி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் மாறும்.

துலாம் ராசி நேயர்களே !
காலையில் கலகலப்பும்,மாலையில் சலசலப்பும் கூடும் நாள். காரிய தாமதம் ஏற்படும். வரவை விட செலவு கூடும். மனதில் நினைத்தது நடை பெறவில்லையே என்ற ஆதங்கப்படுவீர்கள். வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரலாம். பொருளாதார மேன்மை ஏற்படும். கடிதம் கனிந்த தகவலைத் தரும்.

தனுசு ராசி நேயர்களே !
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடவுள் சிந்தனை மேலோங்கும். விரயங்கள் கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படலாம். காரிய வெற்றிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

 கும்பம் ராசி நேயர்களே !
செல்வ நிலை உயரும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். தாராளமாகச் செலவிட ஏராளமான பணம் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. உங்கள் திறமை பளிச்சிடும்.

மகர ராசி நேயர்களே !
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

மீனம் ராசி நேயர்களே !
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க் களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

1 ம் எண் :

சூரியன் 1,10,19,28ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 1 ம் எண் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த மாதம் அரசு வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல முன்னேற்றமும் நம்பிக்கையும் உண்டு. இட மாற்றம் எதிர்பார்ப்போருக்கு சோதனை தரும். கணவன் மனைவி முரண்பட்ட கருத்துக்கள் உண்டு. உறவினர் உறவில் விரிசல் கவலை தரும். மாணவர்களுக்கு சிறப்பான நேரம். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் உண்டு. விருந்து உபசாரங்கள், நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : மஞ்சள் .
எண் : 3
கிழமை : வியாழன்
தெய்வம் : ஆஞ்சநேயர்.

2 ம் எண் :

சந்திரன் : 2,11,20,29 தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 2 ம் எண் என்றால் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் முயற்சிகள் செயல்வடிவம் பெறுவதில் தாமதமாகும்.வேற்று இனத்தவரால், அந்நியரால் அனுகூலம் உண்டு. பயணம் புதிய அனுபவமும் வெற்றியும் தரும். வாகன யோகம் உண்டு. பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும் . சகோதரர் வழியில் நன்மை உண்டு. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : சிகப்பு .
எண் : 9.
கிழமை : செவ்வாய்
தெய்வம் : முருக பெருமான்.

3 ம் எண் :

குரு : 3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 3 ம் எண் என்றால் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம், உழைப்பு ரெட்டிப்பாகும். கிடைத்த பணம் விரயமாகும் நேரம். தற்பெருமை சரிவை சந்திக்கும். பொறுப்பை தட்டிக்கழிக்காமல் பொறுமை காத்தால் குறுகிய கால தடைக்கு பின் நன்மை உண்டு. மாணவர்களுக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி தற்காலிகமானது மட்டுமே. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : ஆரஞ்சு.
எண்கள் : 1
கிழமை : ஞாயிறு
தெய்வம் : சிவ பெருமான்.

4 ம் எண் :

ராகு : 4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 4 ம் எண் என்றால் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உங்களுக்கு எதிர்பாலினத்தவரால் சங்கடம் உண்டு. காதல் கசக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு தாமதம் உண்டு. வாகன வகையில் செலவு உண்டு. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வசிப்பிட மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை நன்மை தரும்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெள்ளி நிறம், பச்சை..
எண்கள் : 5.
கிழமை : புதன்
தெய்வம் : ஐயப்பன்.

5 ம் எண் :

புதன் : 5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 5 ம் எண் என்றால் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் புதிய சிந்தனை நல்ல பலன் தரும்.நண்பர்களால் நன்மை உண்டு. வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு மேலும் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களிடம் குறைகண்டுபிடிப்பதால் அவர்களை திருப்தி படுத்த முடியாமல் திணறுவீர்கள். பணம் சிக்கனம் குறித்த சிந்தனை பலன் தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : நீலம் .
எண்கள் : 8
கிழமை : சனி .
தெய்வம் : மகா விஷ்ணு.

6 ம் எண் :

சுக்கிரன் : 6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 6 ம் எண் என்றால் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் வேலை வாய்ப்பு , வியாபாரம், புதிய தொழில் முயற்சி, ஆகிய அனைத்திலுமே வெற்றி உண்டு. விருந்து நிகழ்ச்சி, உறவினர் வருகை என பல சாதகமான மாறுதல் உண்டு. திருமண பேச்சு சாதகமாகும்.சிறப்பான பொருளாதார மேன்மை உண்டு. புதிய வீடு, சொத்து வாங்கும் நேரம்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெண்மை.
எண்கள் : 4
கிழமை : திங்கள்
தெய்வம் : துர்கை அம்மன்

7 ம் எண் :

கேது : 7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 7 ம் எண் என்றால் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் தேங்கி நின்ற வழக்கு சாதகமாக முடியும்.பயணங்களால் நன்மை உண்டு. புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். வாகன வகையில் மாற்றமும் செலவும் உண்டு. கடன் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நலம். உறவினர் தவிர அனைத்து தரப்பு ஆதரவும் உண்டு. புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : பச்சை
எண்கள் : 5
கிழமை : புதன்.
தெய்வம் : விநாயகர்

8 ம் எண் :

சனி : 8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 8 ம் என்றால் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் பணவரவு மகிழ்ச்சி தரும் .சகோதரர் வழியில் சச்சரவு உண்டு.. மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.. வியாபார வெற்றி உண்டு. அந்நியரால் இடையூறு உண்டு,கவனம் தேவை. பணம் தொடர்பான விஷயங்களில் ஜாமீன், உத்தரவாதம் தராமல் இருப்பது நலம்.
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : மஞ்சள்.
எண்கள் : 3
கிழமை : வியாழன்.
தெய்வம் : ஐயப்பன்,

9 ம் எண் :

செவ்வாய் : 9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் அல்லது,தேதி,மாதம்,வருடம் கூட்டினால் 9 ம் என்றால் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இம்மாதம் உத்தியோக மேன்மை கிடைக்கும். பூமி யோகம் உண்டு. பரம்பரை சொத்து வழக்கு சாதகமாக முடியும். விளையாட்டு துறை, அரசியல், அரசு வேலையில் உள்ளவர்களுக்கு வெற்றியும் நல்ல முன்னேற்றமும் உண்டு. வாகன யோகமும் பண வரவும் மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு சிறப்பான நேரம் இது,
அதிர்ஷ்டம் தருபவை :
நிறம் : வெண்மை,பச்சை.
எண்கள் : 6
கிழமை : வெள்ளி.
தெய்வம்.: ரங்கநாதர்

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்