ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில்

0
673
Ranil United National Party candidate presidential election

(Ranil United National Party candidate presidential election)

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதனையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள ஜோசப் மைக்கல் பெரேரா தவிர ஏனைய அனைத்து உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமையவே கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

(Ranil United National Party candidate presidential election)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :