பகுதி நேர ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் சரண்

0
635
part time teacher police station car accident missing guide searching

part time teacher police station car accident missing guide searching
வியானா வாவியில் சொகுசு வாகனம் விபத்துக்குள்ளானதில் காணாமல்போன நிலையில், காவல்துறையில் சரணடைந்த பகுதிநேர வகுப்பாசிரியர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.

நேற்றைய தினம் சுமார் 9 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அவர் கைதுசெய்யப்பட்டார்.

தனக்கு நித்திரை ஏற்பட்டதால் இவ்வாறு ஜீப் வண்டி ஆற்றில் கவிழ்ந்ததாக அவர், காவல்துறையினரிடம்; வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு முகம் கொடுக்க முடியாத சில பிரச்சினைகள் காரணமாக மொனராகலை பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி காவல்துறையை தவறாக வழிநடத்திய குற்றத்திற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியானா ஆற்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட அவர், நேற்று முற்பகல் மஹியங்கனை காவல் நிலையத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
part time teacher police station car accident missing guide searching

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

part time teacher police station car accident missing guide searching