கட்சி புதிய பாதையில் பயணிக்கும்

0
716
Minister Lakshman Krielle said members parliament increased

our party new way journey warning leading government minister
ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

கட்சியின் உயர் பதவிகளுக்கு செயற்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட பெயர்களைத் தவிர்ந்த அவர்களுக்கு போட்டியான எந்தவொரு நபரது பெயர்களும் முன்மொழியாத காரணத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட பெயர்களுடைய நபர்களை பதவிகளுக்கு நியமிக்க செயற்குழு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்களை முகங்கொடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சிறந்த இளங்குதிரைகளை தயார்படுத்தி வருவதாகவும், இனி கட்சி புதிய பாதையில் பயணிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
our party new way journey warning leading government minister

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

our party new way journey warning leading government minister