துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது

0
665
tamilnews police arrested person led street protests mallagam

kotahena gun fire suspect arrest helper police investigation
கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்தை சந்தியில் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி உந்துருளியில் பயணித்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.

நேற்று பிற்பகல் செபஸ்டின் வீதிக்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 40 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைக்கு அமைய குறித்த சந்தேக நபர், கொலைக்கு ஆதரவு வழங்கியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
kotahena gun fire suspect arrest helper police investigation

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags;kotahena gun fire suspect arrest helper police investigation