போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

0
640
illegal currency four people arrest petrol filling station

illegal currency four people arrest petrol filling station
பொலநறுவை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று மாலை இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த 18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்ட நான்கு பேரே ஐயாயிரம் ரூபாய் போலியான பதினொரு நாயணத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு நாணயத்தாளை வழங்கும் போது ஊழியர் இது போலி நாணயத்தாள் என அறிந்து பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது குறித்த சந்தேக நபர்கள் ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை விழுங்க முயற்சித்த போது பொலிஸாரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
illegal currency four people arrest petrol filling station

illegal currency four people arrest petrol filling station