மறுசீரமைப்பு என்ற பெயரில் ஐக்கிய தேசிய கட்சி நாட்டு மக்களை ஏமாற்றுகிறது

0
645
former general secretory united national party tissa attanayaka

former general secretory united national party tissa attanayaka
ஐக்கிய தேசிய கட்சி அக்கட்சிக்கு வாக்களித்த மக்களின் மக்களை ஏமாhற்றியுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மறுசீரமைப்பு என்ற பெயரில் நாட்டு மக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றிவிட்டதாகவும்,

ஐக்கிய தேசியக் கட்சி மயான வாசலை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, அடுத்த தேர்தல்களில் கட்சியின் தோல்விக்கு செயற்குழு எடுத்த முடிவுகளே காரணமாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து கட்சிக்குள் மறுசீரமைப்பை ஏற்படுத்த பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி கட்சியின் பொதுச் செயலாளரான அக்கிலவிராஜ் காரியவசம், உப தலைவராக ரவி கருணாநாயக்கவையும் தலைவர் பதவியை தவிர்ந்த சில பதவிகளுக்காக புதிய நபர்களையும் றியமித்தது.

இதனிடையே செயற்குழு எடுத்த தீர்மானத்தை எதிர்த்த அக்கட்சியின் மூத்த உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேரா இடைநடுவே வெளியேறிய சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்தவருமான திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசிரமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
former general secretory united national party tissa attanayaka

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

former general secretory united national party tissa attanayaka