மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

0
616
sri Lankan arrest alcohol beer ban day weak jail latest news

sri Lankan arrest alcohol beer ban day weak jail latest new
பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் மது விற்பனையில் ஈடுபட முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, தலவாக்கலை நகரிலிருந்து லிந்துலை நாகசேனை பகுதிக்கு முச்சக்கரவண்டியொன்றில் 48 மதுபான போத்தல்களும் 24 பியர் டின்களையும் கொண்டு சென்றபோது லிந்துலை பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்தியவேளையில் மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

வெசாக் தினத்தை முன்னிட்டு 29 ம் திகதி முதல் 30 திகதி வரை வரை மதுபான சாலைகள் மூடப்படுகின்ற நிலையில் அதிக விலைக்கு தோட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் வழியிலே தலவாக்கலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் பியர் டின்களையும் கொண்டு செல்லப் பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் கைது செய்த சந்தேக நபரை லிந்துலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களுடனான முச்சக்கரவண்டியுடன் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
sri Lankan arrest alcohol beer ban day weak jail latest new

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

sri Lankan arrest alcohol beer ban day weak jail latest news