விசாக பூரணை தினத்தைக் கொண்டாடும் பௌத்தர்களுக்கு அமெரிக்கா வாழ்த்து

0
842
Greetings Buddhists celebrate Poya Day tamil local news

விசாக பூரணை தினத்தைக் கொண்டாடும் பௌத்தர்கள் அனைவருக்கும் அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தர்மத்தின் அடிப்படை போதனைகளான சமாதானம், பொறுமை, இரக்கம் தொடர்பிலான அடிப்படை உள் அர்த்தத்தை மதிப்பதிலும், பெருமைக்கு உட்படுத்துவதிலும் தாம் ஒன்றிணைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்முகத் தன்மையும், உற்சாகமும் கொண்ட பௌத்த மக்கள் அமெரிக்காவில் இருப்பது பெருமையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பௌத்த தர்மத்தின் ஆன்மீக மற்றும் கலாசார பெறுமானங்கள் மனித குலத்தை வளப்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :