கட்சியின் பிரதித் தலைவருக்கு புதிய பொறுப்புகள்: ரணில்

0
710
Ranil attend Sixth International Urban Conference Singapore

(Deputy leader party new responsibilities Ranil Wickremesinghe)

கட்சியின் பிரதித் தலைவருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெற்றியை நோக்கி பயணிப்பதற்காக கட்சியை மேலும் பலப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் கடந்த வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்து.

இதேவேளை, கட்சியில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு மேலதிகமாக, செயலாளர் பதவியொன்றும் உதவிச் செயலாளர் பதவியொன்றும் புதிதாக உருவாக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், கட்சியின் இலக்கை அடைவதற்காக, இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, புதிய பொறுப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

(Deputy leader party new responsibilities Ranil Wickremesinghe)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :