காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கவுள்ள ஆணையாளர்கள்

0
799
Commissioners meet relatives of the disappeared

(Commissioners meet relatives of the disappeared)

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் அடுத்த மாதம் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளனர்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் இந்தக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தனது டுவிட்டர் வலைதளத்தில் சாலிய பீரிஸ் பதிவொன்றை இட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து, தமது திட்டங்கள் குறித்து விவரிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து, அவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முதலாவது சந்திப்பு மே மாதம் 12ஆம் திகதி மன்னாரில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டாவது கூட்டம் மாத்தறையில் அடுத்தமாதம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

(Commissioners meet relatives of the disappeared)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :