ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

0
920
Japan Fans enjoyed Baahubali2 movie,Japan Fans enjoyed Baahubali2,Japan Fans enjoyed,Japan Fans,Japan

(Japan Fans enjoyed Baahubali2 movie)

கடந்த வருடம் டிசம்பர் மாதம், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான “பாகுபலி 2” படத்தை, ஜப்பானில் ரசிகர்களுடன் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி.

இது தொடர்பில் தெரியவருவதாவது :-

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்டமான படம் ‘பாகுபலி 2’. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது.

சுமார் 1700 கோடி வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் 31-ம் திகதி வெளியானது. அங்கு 100 நாட்களுக்கும் மேல் ஓடி 15 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. ஜப்பான் சினிமா ரசிகர்கள் “பாகுபலி 2” படத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்தார்கள்.

தற்போது ஜப்பான் வினியோகஸ்தர் அழைப்பின் பேரில் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். அங்கு ஜப்பான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘பாகுபலி’ பற்றிய பல விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் “பாகுபலி 2” படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் இயக்குனர் ராஜமௌலி கலந்துக் கொண்டார். ஜப்பான் ரசிகர்களுடன் ராஜ மௌலி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அத்துடன், படம் பார்த்த ரசிகர்கள் “பாகுபலி.. பாகுபலி” என குரல் எழுப்ப, அதைப் பார்த்து ராஜமௌலி நெகிழ்ந்திருக்கிறார். மேலும், ஜப்பானில் வரவேற்பை கண்டு அங்குள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

விஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

தியா : திரை விமர்சனம்..!

Tags :-Japan Fans enjoyed Baahubali2 movie

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..!