அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

0
1410
Avengers Infinity War Movie Review Hollywood Film,Avengers Infinity War Movie Review Hollywood,Avengers Infinity War Movie Review,Avengers Infinity War Movie,Avengers Infinity War

(Avengers Infinity War Movie Review Hollywood Film)

ஆரம்பத்தில் ஸ்பேஸ், மைண்ட், ரியாலிட்டி, பவர், டைம் மற்றும் சோல் உள்ளிட்ட உள்ளிட்ட 6 அதிசயக் கற்களும் உலகத்தில் 6 வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

2 கற்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது என்ற நியதிப்படி இவை பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த 6 கற்களையும் தன்வசப்படுத்தி உலகத்தையே ஆட்டிப் படைத்து, அழிக்க நினைக்கிறார் தனோஸ். அந்த கற்களை தனோஸ் அடையமுடியாதபடி தடுக்க, சூப்பர் ஹீரோக்களுக்கும், தனோசுக்கும் இடையே சண்டை முற்றுகிறது.

சாதாரணமாகவே தனோஸின் தாண்டவத்தை சூப்பர் ஹீரோக்கள் தாங்க முடியாத நிலையில், அந்த கற்களை அடைந்தால் விபரீதமாகும் என்பதால் தனோஸ் அந்த கற்களை அடைய முடியாதபடி பல தடைகளை கொண்டுவருகின்றனர்.

இதில் சூப்பர் ஹீரோக்களின் தடைகளை தவிடுபொடியாக்கி தனோஸ் 4 கற்களை அடைந்து விடுகிறார். கடைசியாக விஷனிடம் இருக்கும் மைண்ட் ஸ்டோன் மற்றும் எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல் இருக்கும் சோல் ஸ்டோனையும் அடைய நினைக்கிறார்.

இந் நிலையில், மைண்ட் ஸ்டோனை வைத்திருக்கும் விஷனை, பிளாக் பாந்தரின் வக்கான்டாவுக்கு அழைத்து சென்று அந்த அதிசயக் கல், தனோசுக்கு கிடைக்க முடியாதபடி அழிக்க சூப்பர் ஹீரோக்கள் முடிவு செய்கின்றனர்.

ஆனாலும் கடைசியில், விஷனிடம் இருக்கும் கல்லை சூப்பர் ஹீரோக்கள் அழித்தார்களா? அந்த கல்லை தனோஸ் கைப்பற்றினாரா? சோல் ஸ்டோன் இருக்கும் இடத்தை தனோஸ் கைப்பற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

மேலும், இதுவரை வெளியான படங்களில் ஒரு சூப்பர் ஹீரோ, ஒரு வில்லன் அல்லது நான்கைந்து சூப்பர் ஹீரோக்கள், ஒரு வில்லன் இருக்கும் படங்களை தான் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந் படத்தில் மொத்தமாக 22 சூப்பர் ஹீரோக்களுக்கும், ஒரே ஒரு வில்லனுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள், போராட்டங்கள், உயிரிழப்பு என ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் ஒரே கதையில் கொண்டு வந்து அவர்களது கதாபாத்திரத்தை ஏற்ற, இறக்கமில்லாமல் இயக்கியிருக்கிறார்கள் அந்தோணி ரசோ மற்றும் ஜோ ரசோ. ஸ்டான்லி மற்றும் ஜேக் கிர்பியின் ”தி அவெஞ்சர்ஸ்” காமிக்ஸை மையப்படுத்தி, கிறிஸ்டோபர் மார்க்கஸ் மற்றும் ஸ்டீபன் மிக்பீலி விறுவிறுப்பான திரைக்கதைகைக்கு வகை செய்திருக்கிறார்கள். இந்த படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

அலன் சில்வஸ்ட்ரியின் பின்னணி இசையில் அரங்கமே அதிர்ந்தது. டிரெண்ட் ஒப்பலோச்சின் ஒளிப்பதிவில் காட்சிகள் அதிரடியாக, பிரம்மாண்டமாக வந்துள்ளது.

ஆக மொத்தத்தில் ”அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” பிரம்மாண்டம் முடியவில்லை என்பது தான் நிஜம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா

விஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

மகள் வயது பெண்ணை மணப்பதா..? : மிலிந்த் சோமனின் அதிரடி பதில்..!

பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

தியா : திரை விமர்சனம்..!

Tags :-Avengers Infinity War Movie Review Hollywood Film

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..!