(viyana canal accident president maithripala sirisena)
மஹியங்கனை வியானா கால்வாயில் கடந்த தினங்களில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வியானா கால்வாய்க்கு பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு மகாவலி அதிகாரசபை பணிப்பாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக 26 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் வியானா கால்வாயில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நேற்று அதிகாலை 5 மணியளவில் பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த ஜீப் ஒன்று மாபாகட வெவ, 8ஆம் கட்டைக்கு அருகில் வியானா கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தின் போது வாகனத்தில் பயணித்த சாரதியை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிங்குராங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணம் முடித்த ஆசிரியர் ஒருவரே இந்த விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில், காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, கொழும்பில் இருந்து இன்று கடற்படையினர் செல்லவுள்ளனர்.
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:viyana canal accident president maithripala sirisena,viyana canal accident president maithripala sirisena