(research allowing removed brain alive)
அமெரிக்காவில் சமீபத்தில் பன்றிகளின் மூளை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இதன் மூலமாக மனிதன் உயிரிழந்த பின்பும் பல நாட்களுக்கு மனித மூளையை உயிர்ப்போடு வைக்கும் முறையைக் கண்டறிய இந்த பன்றிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது வழிவகுத்துள்ளது.
உயிரிழந்த சுமார் 100 பன்றிகளின் உடலிலிருந்து தனியே எடுக்கப்பட்ட மூளைகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த செயற்கை ரத்தம் பாய்ச்சி அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தலைவர் நேனந்த் சேஷ்டன் (Nenad Sestan) சோதனை மேற்கொண்டார்.
அதில் பெரும்பாலான மூளைகளில் இருந்த பல பில்லியன் செல்கள் உடலை விட்டுப் பிரிக்கப்பட்ட 36 மணி நேரம் வரை உயிர்ப்போடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே முறையை உயிரிழந்த மனிதனின் மூளையோடு பயன்படுத்தி சோதனை மேற்கொண்டு வெற்றி கண்டால், மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முழுவதும் உயிர்ப்போடு வைத்து பயன்படுத்த உதவும் என ஆய்வுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
OUR GROUP SITES