(sri lanka cricket board election 2018 news Tamil)
இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் தினம், புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோலுக்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடக்கவுள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. அதுமாத்திரமின்றி வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளும் தினம் இன்றுடன் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஷ்தபா, கிரிக்கெட் சபையுடன் வருடாந்த பொதுக் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் சபையின் தேர்தல் குழுவுக்கு பதிலாக புதிய தேர்தல் குழுவொன்று நடைபெறவுள்ள வருடாந்த பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்படவுள்ளது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
<<Related News>>
- துள்ளியமான பந்து வீச்சால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ரோயல்ஸ்!!!
- இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் விவகாரம் தொடர்பில் ஐசிசி!!!
- சென்னை அணிக்கு மீண்டும் ஒரு இழப்பு! : உபாதையால் வெளியேறும் முக்கிய வீரர்!
- கோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை!
- கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த திசர பெரேராவின் அற்புத பிடியெடுப்பு! (காணொளி இணைப்பு)
- அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை வாட்டி எடுக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்!!!
- சென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்க்க செல்பவரா நீங்கள்? : இதை கொஞ்சம் படிங்க!!!