சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற முடியாது – சென்னை மேல்நீதிமன்றம்

0
724
High Court said can not interfere with the authority of the speaker

(High Court said can not interfere with the authority of the speaker)

தமிழக சட்டசபையில்  தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என தி.மு.க. தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என சென்னை மேல்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்

தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. சபாநாயகர் தனபால் படத்தை திறந்து வைத்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால் அவரது படத்தை திறக்க பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

 ஜெயலலிதா புகைப்படத்தை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்குடன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பெணர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூசி அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

 இந்நிலையில், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என கூறிய தலைமை நீதிபதி அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

High Court said can not interfere with the authority of the speaker