(San Kuhavarrathan comment trincomalee muslim teacher problem)
ஒரு இந்துப் பாடசலையின் கலாசார விழுமியங்களுக்கு மதத்தின் பெயரால் மனிதத்தைத் தொலைக்க இடமளிக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச்செயலாளர், மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
மதத்தின் பெயரால் மனிதத்தைத் தொலைக்க வேண்டாம் என்றும் அபாயா என்ற விடயத்தை இந்து பாடசாலைக்குள் திணிக்கவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வந்தமை தொடர்பாக மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையிலுள்ள பிரசித்தமான பெண்கள், இந்து கலாசாரத்துடனான குறித்த பாடசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வந்தது தொடர்பில் ஏற்பட்ட பாடசாலையின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக கண்டனப் பேரணி நடாத்தியுள்ளனர்.
இக்கல்லூரி இந்து மகளிர் கல்லூரியாக இருக்கின்ற போது, பாடசாலையில் கடமையாற்றி வந்த முஸ்லிம் ஆசிரியைகள் இந்துப் பாரம்பரியங்களை மதித்து விசேட சீருடையை அணிந்து வந்தனர்.
எனினும், அண்மையில் மத்திய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஒருசில முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வந்ததாகவும் பாடசாலை அதிபர் அவ்வாறு வருவது சம்பந்தமாக பாடசாலையின் கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு நான்கு ஆசிரியைகள் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஒரு ஆசிரியை அதற்கு உடன்பட்டிருக்கவில்லை.
தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டு சென்று குப்பைத் தொட்டியில் போடுங்கள் என்றும், எமக்கு அதிக உச்சபட்ச அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என்ற கடுந்தொனியில் அங்குள்ள அபாயா அணிய மறுத்த ஆசிரியையின் சார்பாக பாடசாலைக்குள் நுழைந்த சில நபர்கள் அங்குள்ள அதிபரையும் பெற்றோரையும் எச்சரித்துச் சென்றுள்ளனர்.
திருகோணமலை என்பது இராவணன் வாழ்ந்த சிவ பூமி. இங்கு மூவின மக்களும் சமத்துவத்துடனும் சகல விழுமியங்களுடனும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தருணத்தில் இவ்வாறன தேவையற்ற விதத்தில் கல்விச் செயற்பாடுகளில் மதரீதியான நடவடிக்கைகளையும் அது சம்பதமாக அழுத்தங்களையும் தங்கள் மதம் சார்பான தனித்துவமான பாடசாலைக்குள் சுமூகமாக இயங்கிக்கொண்டிருக்கும் செயற்பாடுகளை, கொக்குப்போல மீனுக்காகக் காத்திருக்கும், பேரினவாதிகள் இவ் வேளையில் நாங்களே சென்று அவர்களின் வாய்க்குள் மீனை எடுத்துக்கொடுப்பதாக அமைந்துவிடக்கூடாது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் நாங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே ஒரு இந்துப் பாடசலையின் கலாசார விழுமியங்களுக்கு மதத்தின் பெயரால் மனிதத்தைத் தொலைக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு இலங்கை நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் தலைநகரின் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையிலும் கல்விச் செயற்பாடுகளில் அதிக அக்கறை கொண்டவர் என்ற ரீதியிலும் நாங்களும் தலைநகரில் முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருகின்றோம் என்பதாலும் மதத்தின் பெயரால் கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இது சம்பந்தமாக உடனடியாக ஒரு சுமூக சூழ்நிலைக்குக் கிழக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் வித்தியானந்தமூர்த்தி அவர்களுக்கும், திருகோணமலை மாவட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கும் தொடர்பை ஏற்படுத்தி நிலைமையை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறும் சண். குகவரதன் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரும், ஒரு வருடத்திற்கு முன்னரும் இராமகிருஷ்ண கோணேஷவரா இந்துக்கல்லூரி, நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம், விபுலானந்த இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் ‘அபாயா’ அணிவது சம்பந்தமான பிரச்சனைகள் தலைதூக்கி இருந்தன.
எனவே அபாயா அணிய வேண்டும் என்ற முஸ்லிம்களின் கலாசாரத்தை நான் மதிக்கின்றேன். ஆனால் அதேபோல இந்துக்களின் கலாசாரத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டால் நான் சீறி எழவும் தயங்க மாட்டேன்.
அதையும் தாண்டி கல்விச் செயற்பாடுகளில் ‘அபாயா’ போன்ற விடயங்களை இந்துப் பாடசாலைகளில் புகுத்த முடியாது என்றும் சண். குகவரதன் கூறியுள்ளார்.
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
- ஈ.பி.டி.பி பெரிய கட்சி அல்ல; எம்.ஏ. சுமந்திரன்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags; San Kuhavarrathan comment trincomalee muslim teacher problem