கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு உருண்டை காரக்குழம்பு சாப்பிடுவோம் வாங்க…!

0
787

(Fat Burn Kollu Urundai Kaarakkulambu Recipe)

புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச் சத்து என அனைத்து சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்க வல்லது.

தேவையான பொருட்கள் :
* கொள்ளு – 200 கிராம்
* காய்ந்த மிளகாய் – 6
* துவரம்பருப்பு – 4 டீஸ்பூன்
* கருப்பு உளுந்து – 4 டீஸ்பூன்
* புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
* சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
* எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
* துவரம்பருப்பு, கருப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

* புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும்.

* உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.

<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

 

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
Web Title : Fat Burn Kollu Urundai Kaarakkulambu Recipe