இலங்கையர் என்ற உணர்வுடன் சேவையாற்றவே விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

0
730
President Maithripala Sirisena Special interview BBC Sinhala Service

(President Maithripala Sirisena Special interview BBC Sinhala Service)

நல்லாட்சியில் ஊடக சுதந்திரம் சிறப்பான நிலையில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில், கண்டியின் சில இடங்களில் வன்முறைகள் மேலும் பரவாமல் தடுக்கவே சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறுபான்மை – பெரும்பான்மை என மக்களை பிரித்து பார்ப்பதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்; ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் வசிக்கும் சகலருக்கும் இலங்கையர் என்ற உணர்வுடன் சேவையாற்றுவதே தனது எதிர்ப்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த 80 சதவீதமான காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

(President Maithripala Sirisena Special interview BBC Sinhala Service)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :