கட்சியின் புதிய பயணம் ஆரம்பமாகின்றது : அமைச்சர்

1
782
New journey with May Day celebrations

New journey with May Day celebrations

எதிர்வரும் மே தின கொண்டாட்டங்களை தொடர்ந்து கட்சி புதிய பயணத்தை தொடங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட துணை தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பல்வேறு பிரிவுகளில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு எமது கட்சிக்குள் மாத்திரம் இன்றி அனைத்து கட்சிகளுக்குள்ளும் இரு வேறு கருத்துக்களுடன் குழுக்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், கட்சிக்குள் இவ்வாறு முரண்பட்ட கருத்துக்களுடன் இரு குழுக்கள் இருந்தாலும் அவர்கள் சுதந்திர கட்சிக்கு விசுவாசமாகதான் செயற்படுகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இவ்வாறே தொடர்ந்தும் ஸ்ரீ.ல.சு.க.வின் பயணத்தை முடிக்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கட்சியின் மே தின கொண்டாட்டங்களுடன் ஒரு புதிய பயணம் தொடங்குவோம் என்றும் கட்சியை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அது வெற்றி பெறாது என அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.