(National government Agreements President – Prime Minister signed Tomorrow)
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி – பிரதமர் ஆகியோர் விரைவில் கையெழுத்திடவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளைய தினம் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
‘தெளிவாக கூறுகிறேன் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் விரைவில் கைச்சாத்திடவுள்ளனர்.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரே, புதிய அமைச்சரவை பதவியேற்கும்.
கூட்டரசாங்கத்தின் பயணத்தில் எந்தவித பாதிப்பும் தடையும் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாகக்குழுவினர் தெரிவு கூட்டம் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கின்றேன்.
புதிய நிர்வாக குழுவினரை தெரிவு செய்யும் போது எந்தவித எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை.
பதவிகளுக்கு பெயர்களை முன்வைக்கப்பட்ட போது, அதற்கு மாற்றாக வேறு பெயர்கள் எந்தவொரு உறுப்பினராலும் முன்வைக்கப்படவில்லை.
மாற்று பெயர்களை முன்வைக்க யாராவது விரும்பியிருந்தால் அதனை கூட்டத்தின்போது முன்வைத்திருக்க முடியும் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
(National government Agreements President – Prime Minister signed Tomorrow)
More Time Tamil News Today
- கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் காரில் மோதி சிறுமி மரணம்…! கவனயீனத்தால் வந்த விபரீதம்
- ஐ.தே.க.விற்கு எதிர்காலம் இல்லை : சுஜீவ அதிருப்தி
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்