தேசிய அரசியலில் மூன்றாவது அணிக்காக முதல்வருடன் சந்திப்பு!

0
822
Telangana Chief Minister Chandrashekhar said Stalinl meet on 29th.

(Chandrashekhar said Stalinl meet on 29th)

 

தேசிய அரசியலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க ஆதரவு திரட்டிவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்வரும் 29ஆம் திகதி சந்திக்க உள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பெனர்ஜியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்துள்ளார்.

 

தி.மு.க.இ ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மாநில கட்சிகளின் ஒற்றுமை மற்றும் மத்திய அரசுடன் பலமான நட்புறவுக்கு தி.மு.க. எப்போதுமே துணையாக நின்றுள்ளது. பா.ஜ.க.வின் சர்வாதிகார – ஜனநாயகவிரோத ஆட்சிக்கு எதிடாக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பெனர்ஜியின் பெருமுயற்சிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவுக்கு மம்தா பெனர்ஜி நன்றி தெரிவித்திருந்தார். எங்களது முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மூன்றாவது அணி அமைக்க ஆதரவு திரட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை மு.க. ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியின் 17 ஆம் ஆண்டு விழாவில் சந்திரசேகர ராவ் இன்று வெளியிட்ட அவர், தேசிய அரசியலில் புதிய அணியை உருவாக்குவது தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த சில தலைவர்கள் ஏற்கனவே தன்னை சந்தித்துப் பேசியதாகவும் குறிப்பிட்டார்.

(Chandrashekhar said Stalinl meet on 29th)