ஒன்ராறியோவில் லிபரலுக்கு கடும் பாதிப்பு!

0
797
Ontario Liberal

Ontario Liberal

ஒன்ராறியோ மாகாண லிபரல் அரசு கடந்த காலங்களில் தனது பாதீட்டில் பல மில்லியன் டொலர்களை குறைத்து கணக்கிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு திணைக்களத்தின் நாயகம் போனி லைசிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பற்றாக்குறைகளை மிகவும் பாரிய அளவில் குறைத்து தனது நிதி அறிககைகளில் லிபரல் அரசர்ங்கம் மதிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் ஒன்ராறியோவின் வரவு செலவுத் திடடத்தில் காணப்படும் துண்டுவிழும் தொகையானது, உண்மையான பற்றாக்குறையினை விடவும் குறைவாக காணப்படுவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் சில வாரங்களில் ஒன்ராறியோ மாகாணத்துக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை லிபரல் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்ராறியோ மாகாண தேர்தல் ஆதரவு நிலை தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்கள் லிபரல் கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகின்றமையை காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.