மோசமான ஆட்டத்தினால் பொல்லாரட்டுக்கு வந்த சோதனை!!!

0
852
kieron pollard caribbean premier league 2018

(kieron pollard caribbean premier league 2018)

மே.தீவுகளில் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக்கின் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து கீரன் பொல்லார்ட் நீக்கப்பட்டுள்ளார்.

கீரன் பொல்லார்ட்டுக்கு பதிலாக மே.தீவுகளின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரன் பொல்லார்ட் கடந்த சீசன்களில் பார்படோஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வந்தார். எனினும் தற்போது அவருடைய மோசமான போர்ம் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜேசன் ஹோல்டர் கடந்த வருடம் இங்கிலாந்து தொடர் காரணமாக கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடவில்லை. எனினும் அனுபவம் வாய்ந்த அணித்தலைவரை நியமிக்கும் பொருட்டு, ஹோல்டருக்கு இந்த தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜேசன் ஹோல்டர் மே.தீவுகள் அணிக்காக 56 ஒருநாள் 21 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Related News>>