மணப்பெண் கோலத்துடன் நேர்முகத் தேர்வுக்கு சென்ற பெண்

0
950
Employment graduates Brides went interview

(Employment graduates Brides went interview)
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கு மணப்பெண் ஒருவர் சென்று சமூகமளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாத்தறை மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு கெட்டவலகமவில் வசிக்கும் பட்டதாரியான கே.ஆர். அமாலி ப்ரியதர்ஷன ஜயரத்ன என்ற பெண் மணப் பெண் கோலத்துடன், மணமுடித்த கணவருடன் நேர்முகத் தேர்வுக்குச் சென்று சமூகமளித்துள்ளார்.

இவர்கள் தங்களின் தேனிலவை முடித்துவிட்டு மணமகனின் வீட்டிற்கு புதுத் தம்பதிகளை வரவேற்கும் வைபவத்திற்கு கலந்துகொள்ளும் நாளில் குறித்த மணப்பெண்ணிற்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையிலேயே மணப்பெண் கோலத்துடன், நேர்முகத் தேர்வுக்குச் சென்று பங்குபற்றியுள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags; Employment graduates Brides went interview