AMP என்ற நிறுவனத்தின் மீது criminal வழக்கு

0
933
Australia AMP Breach

Australia AMP Breach

அவுஸ்திரேலிய நிறுவனங்களை வழிப்படுத்தும் ASIC – Australian Securities and Investments Commission-இடம் பொய் சொன்ன குற்றத்திற்காக, AMP என்ற நிறுவனத்தின் மீது criminal வழக்கு பதிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, வங்கிகள் முறைகேடாக நடந்தனவா என விசாரிக்கும் Royal Commission-இடம் இன்று விளக்கமளிக்கப்பட்டது.

சுயாதீன அறிக்கை என்று கூறி, AMP தாக்கல் செய்த அறிக்கை ஒன்றை அவர்கள் மாற்றியமைத்தமை, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்காமல் கட்டணம் வசூலித்தமை என்பன குறித்து இன்றைய விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இவை குறித்தும், நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை குறித்தும், AMP என்ற நிறுவனத்தின் மீது criminal வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று royal commission விசாரணையில் வழக்காடும் Rowena Orr Q-C கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here