ஐரோப்பிய லீக் : இறுதிக்கட்டத்தில் வெற்றியை பறித்த அட்லாண்டிகோ மெட்ரிட்!

0
897
Arsenal vs atletico madrid Football news Tamil | Football news in Tamil

(Arsenal vs atletico madrid Football news Tamil)

ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அர்செனல் மற்றும் அட்லாண்டிகோ மெட்ரிட் அணிகளுக்கிடையிலான அரையிறுதியின் முதலாவது லீக் போட்டியில் சமனிலையில் முடிவடைந்தது.

அர்செனல் அணியின் சொந்த மைதானமான எமிரேட்ஷ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பத்தில் அர்செனல் அணி ஆதிக்கத்தை செலுத்தியது.

போட்டியின் முதற்பாதியில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டன.

எனினும் பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியின் 61வது நிமிடத்தில் அர்செனல் அணியின் லெகஷட் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் சமனிலையை நோக்கி அட்லாண்டிகோ அணி நகர்ந்தது. போராடிய அட்லாண்டிகோ அணி ஒருவழியாக 82வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை சமப்படுத்தியது.

போட்டியில் எஞ்சியிருந்த மிகுதிநேரத்தில் இரு அணிகளின் முயற்சிகளும் வீணாக, போட்டி 1-1 என நிறைவுக்கு வந்தது.

<<Related News>>