யாழ் பொலிஸாருக்கு விடுமுறை ரத்து : பொலிஸ் மா அதிபர்

0
710
All of the police vacations in Jaffna will be canceled

All of the police vacations in Jaffna will be canceled

யாழ் நகரில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான விடுமுறையானது இன்று (27) தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் விடுமுறை தினங்களை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பொலிஸ் பிரிவு உத்தியோகஸ்தர்கள் விடுமுறை கோரியிருந்தனர்.

இந்நிலையில்,சாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித்தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகல் நிறைவு பெறாத நிலையில் இருப்பதுடன் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொசான் பெர்னாண்டோ பொலிஸாருக்கான விடுமுறை இவ்வாறு இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :