ஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்

0
889
12 Zodiac Weakness latest horoscope

(12 Zodiac Weakness latest horoscope )

உறவுகள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை. தனி மனிதனாக இந்த சமூகத்தில் வாழவே முடியாது. அப்படி இருக்கும்போது, அந்த உறவுகளை சமாளித்து தொடர்ந்து எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்பது தான் எல்லோரின் எண்ணமாக இருக்கும்.

ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும். அதே போல் அவருடைய உறவில் விரிசல் ஏற்படவும், இந்த ராசி தான் காரணம். உங்கள் ராசியின்படி உங்களுடைய உறவில் விரிசல் உண்டாவதற்கான காரணங்களை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் ராசிகளைக் கொண்டு உங்கள் பலவீனங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
நீங்கள் அடுத்தடுத்து சாகசத்தை தேடி ஓடும் நபர். நீங்கள் வேலை இல்லாமல் வெட்டியாக இருப்பதை வெறுப்பீர்கள். வாழ்க்கையின் எல்லா இடத்திலும் நீங்கள் இருப்பவர். இதையே நீங்கள் உங்கள் உறவிலும் முயற்சிப்பீர்கள்.

உங்கள் எதிர்பார்ப்புகள் அல்லது கனவுகளை உங்கள் துணைவர் பூர்த்தி செய்யவில்லை என்றால் அவர் மீதும் உங்களுக்கு சலிப்பு ஏற்படும். உங்கள் துணைவரும் சாகச குணத்தோடு இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படும். சில நேரம் நீங்கள் விரும்பும் ஒருவருடன் உங்கள் பொழுதைக் கழிப்பதே ஒரு சாகசமாக இருக்கும்.

ரிஷபம் 
கடந்த காலத்தைப பற்றி நினைத்துக் கொண்டிருப்பதே உங்கள் கவலை ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் துணைவரை கஷ்டப்படுத்த நினைக்கிறீர்கள். இதனால் உங்கள் உறவு பாதிப்புக்கு உள்ளாகிறது. வீணான செயல்களில் காலம் கடத்தி, அமைதியான வாழ்க்கையில் சலனத்தை உண்டாக்குகிறீர்கள்.

மிதுனம் 
உங்கள் மனது மாறிக் கொண்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது உங்கள் பார்வையை செலுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உங்களுக்கு முற்றிலும் பொருந்தும். இதனால் மட்டுமே உங்கள் உறவு பாதிக்கப்படுகிறது. இதை விட சிறந்த ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணத்தை நீங்கள் கைவிடும்போது தான் உங்களுக்கு நல்ல காதல் வாழ்க்கை கிடைக்கும். இந்த நிமிடம் உங்கள் கையில் இருப்பதின் மேல் உங்கள் பார்வை இருக்கட்டும். இந்த் நிமிடத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

கடகம் 
உங்கள் கட்டுப்பாடு உங்கள் உறவின் மேல் இருக்க வேண்டும். எப்போதுமே உங்கள் துணைவரை துளைத்துக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் துணைவரைப் பற்றி எல்லா சிறு தகவல் கூட தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். எல்லா நேரத்திலும் அவருடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். உங்கள் துணையுடன் ஒரு ஆழ்ந்த தொடர்பு இருக்க வேண்டும் என்று என்னும் நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர். உங்கள் துணைவர் தானாக மூச்சு விட சிறிது நேரம் கொடுங்கள். அதன்பிறகு அவரே உங்கள் பின்னால் வருவார்.

சிம்மம் 
நீங்கள் சொல்லும்படி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பதால் மட்டுமே உங்கள் உறவில் சிக்கல் எழுகிறது. உங்கள் யோசனைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் யோசனைப்படி தான் நடக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் . இல்லையேல், நிலைமை மோசமாகி விடும். உறவுகளுக்கு இடையில் ஒத்துப் போவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளாமல் இருந்தால் , ஒருநாள் உங்களிடம் எதுவுமே இருக்காது.

கன்னி 
வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு நீங்கள் மனமுடைந்து விடுவீர்கள். எளிதில் பயனிக்கமுடியாததாக உங்கள் அணுகுமுறை இருக்கும். உங்கள் எதிர்மறை குணத்தால் உங்கள் துணைவர் உங்கள் மீது குறை கூறலாம். உங்களுடைய எதிர்மறைக் குணம் தான் உங்கள் உறவு கெடுவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இல்லாதவரை, உங்களால், வேறு யாருடனும் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்து நேர்மறை எண்ணத்தை மனதில் விதைத்து சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

துலாம் 
நீங்கள் மிகவும் மென்மையானர் என்பதை சொல்லி அதற்காக உங்களை பாராட்டியே ஆக வேண்டும். சில நேரங்களில் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருப்பீர்கள். உங்களை யாரவது கேலி செய்தால் கூட நீங்கள் வேதனைப் படுவீர்கள். உங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய குணம் மட்டுமே உங்கள் உறவின் எதிரி. தேவையற்ற இடத்தில் இந்த குணம் சண்டையை இழுத்து விடுகிறது. எப்போதுமே நீங்கள் தாக்கப்படுவதாக எடுத்துக் கொள்வீர்கள். எல்லா நேரத்திலும் உறவுகளை கடினமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது.

விருச்சிகம்
அடுத்தவர் முகத்தில் அடிப்பது போல் இருக்கும் உங்கள் குணம் , யாரையும் உங்களிடம் நெருங்க விடுவதில்லை. நீங்கள் மற்றவரிடம் விரைந்து பழக வேண்டும் . உங்கள் துணைவரை உங்களுக்கு புரிய வைக்க எந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் வழங்குவதில்லை. அப்படி வாய்ப்பை வழங்கினாலும், அதனை அவர் பயன்படுத்தும் வரை காத்திருக்காமல் எரிச்சல் அடைவது உங்கள் பண்பு. ஒரு தனி நபராக நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், காதல் வாழ்க்கை என்பது இன்னும் பல நாடகங்களைக் கொண்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தனுசு 
நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள். நீங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புவீர்கள். குறிப்பாக உங்கள் ரொமாண்டிக் தருணங்களை. உங்கள் துணை உங்களுக்கு ஏற்றவராக இல்லை என்ற நினைப்பால் உங்கள் உறவில் விரிசல் உண்டாகும். நடக்க முடியாத செயல்களை நினைத்துக் கொண்டு , இன்றைய வாழ்கையை நீங்கள் இழந்து கொண்டு இருப்பீர்கள்

மகரம் 
உங்கள் உணர்வுகளை அடக்கத் தெரிந்தவர் நீங்கள். உங்களிச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிக் கொண்டு இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆழ் மனதில் உள்ளவற்றை எவராலும் அறிந்து கொள்ள முடியாது. இப்படி செய்வதால் உங்களை யாரும் வேதனைப் படுத்த முடியாது என்று நினைக்கிறீர்கள். ஆனால் மறுபுறம், நீங்கள் வெளிப்படையாக இல்லாத காரணத்தால் உங்கள் உறவில் சிக்கல் ஏற்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் இருந்து வெளிக்கொணர உங்கள் துணைவர் மிகவும் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். இதனால் அவரிடம் நீங்கள் பல விஷயங்களை மறைக்க நேரலாம்.

கும்பம்
உங்களுடைய அஜாக்கிரதையான குணத்தால் உங்கள் உறவுகள் பாதிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் துணைவரை அதிகம் நேசிப்பீர்கள் . ஆனால் அதனை வெளியில் காட்டத் தெரியாது. உறவுகளை வளர்ப்பதில் நீங்கள் ஒரு பெரிய சோம்பேறி, சரியான காலத்தில் உறவின் முக்கியத்துவத்தை உங்களால் புரிய வைக்க முடியாது. ஆனால் இவற்றை சரியாக திட்டமிட வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். உறவுகளை வளர்ப்பதில் தனி பயிற்சி அவசியம். என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மீனம்
கடலை போடுவதும் கலகலப்பாக இருப்பது வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் சாத்தியப்படாது. உங்கள் கலகலப்பான குணம் உங்கள் துணைவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கலாம். எல்லோரிடமும் அரட்டை அடிக்கும் சுபாவம் உள்ளவராக நீங்கள் இருப்பீர்கள். இது ஒரு நல்ல குணமாக இருந்தாலும், அளவுக்கு மீறும்போது குழப்பத்தை உண்டாக்கும். இதனால் ஏற்படும் கவனக்குறைவால் உங்கள் உறவில் விரிசல் உண்டாகலாம். இவ்வளவு வெளிப்படையாக இருப்பதை உங்கள் துணைவர் விரும்பாமல் இருக்கலாம்.

எமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:12 Zodiac Weakness latest horoscope