சொந்த நாட்டு இரசிகர்களின் கண் எதிரே காலிறுதிக்குள் நுழைந்தார் நடால்!

0
1267
barcelona open tennis reach spain player Rafael Nadal quterfinal

(barcelona open tennis reach spain player Rafael Nadal quterfinal)

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால், வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்று போட்டியில், ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால், சகநாட்டு வீரரான கில்லர்மோ கார்சியா லோபசுடன் மோதினார்.

சொந்த நாட்டு இரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அரங்கேறிய இப்போட்டியில், முதல் செட்டை நடால் 6-1 என எளிதாக வெற்றிகொண்டார்.

இதனைதொடர்ந்து அரங்கேறிய இரண்டாவது செட்டில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நடால், இரண்டாவது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்று, நடைபெறும் காலிறுதி போட்டியில், நடால் சுலோவேகியாவின் கிளிசானை எதிர்கொள்ளவுள்ளார்.

(barcelona open tennis reach spain player Rafael Nadal quterfinal)
<<Related News>>