(Actress Surveen Chawla exclusine Interview)
”எனது சினிமா வாழ்க்கையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை” என நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
அதாவது, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருந்த சுர்வீன் சாவ்லா ஒரு நல்ல நாளில் தொலைக்காட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு பெரிய திரைக்கு வந்தார்.
இந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள அவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், அவர் சினிமா துறை பற்றி கூறியிருப்பதாவது.. :-
”சினிமா துறையில் காட் ஃபாதர் இருந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மை இல்லை. மக்களிடம் இருக்கும் திறமையை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று பார்க்கக் கூடாது.
இப்படி பளிச்சென்று நான் பேச காரணம் உள்ளது. பட வாய்ப்புகளை 2 அல்லது 5 பேருக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் கொடுக்காமல் பலருக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் வாய்ப்புகள் குறைவு.
சினிமா துறையில் உள்ள பெரியாட்கள் கண்ணை திறந்து பார்க்க விரும்பவில்லை. 5 பேருடன் மட்டுமே வேலை பார்ப்போம் என்று கூறுகிறார்கள். புதியவர்களின் திறமையையும் ஆதரிக்க வேண்டும்.
6 ஆண்டுகளுக்கு முன்பு நான் தொலைக்காட்சி சீரியல்களில் இருந்து பெரிய திரைக்கு வந்த நேரத்தில் ஒரு பட வாய்ப்பு என்னிடம் இருந்து பறிக்கப்பட்டு பிரபலத்தின் பிள்ளைக்கு அளிக்கப்பட்டது. அதை பார்த்து நான் பேரதிர்ச்சி அடைந்தேன்.
திறமைக்காக அல்ல யாரோ ஒருவரின் மகள் என்பதற்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர சிறுது காலம் தேவைப்பட்டது.
ஆனால், திறமையால் ஜெயிக்க முடியும் என்று எனக்கு நானே நம்பிக்கை அளித்துக் கொண்டேன்” என சுர்வீன் சாவ்லா கூறினார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* 38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா
* கணவரை அந்த விடயத்தில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட்டில் பெரும் பரபரப்பு..!
* படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் : சரோஜ்கானின் கருத்துக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்..!
* ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை : பகீர் தகவல்..!
* அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!
* உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!
* காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!
* மிஸ்டர் சந்திரமௌலி பட ட்ரெய்லர் நாளை வெளியீடு..!
* காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!
Tags :-Actress Surveen Chawla exclusine Interview
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-