சவுதியில் 48 பேருக்கு மரண தண்டனை

0
1228

சவுதியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள்.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கு அவ்வமைப்பு கண்டனமும் , கவலையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்வமைப்பு தெரிவிப்பதானது ; “சவுதிஅரேபியாவில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவது நல்லதல்ல. போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் இளவரசர் மொஹமட் சல்மான் அண்மையில் “கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

சவுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 600 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் போதைப் பொருள் கடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.