தொலைக்காட்சி நேரலையில் திடீரென நுழைந்த ஆயுததாரிகளால் அதிர்ச்சி!

0
167

ஈக்குவடோரில் தொலைகாட்சி நிலையம் ஒன்றில் நேரடி ஒளிபரப்பின் போது உள்ளே நுழைந்த ஆயுததாரிகள் பணியாளர்களை அச்சுறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் டீசி தொலைக்காட்சியின் அலுவலகத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நேரடி ஒளிபரப்பின் போது நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் பணியாளர்களை அச்சுறுத்தி நிலத்தில் அமரச்செய்ததுடன் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பலரை பணயக்கைதிகளாக பிடித்த ஆயுதாரிகள் ஊழியர்கள்

அதன்பின்னர் ஆயுதாரிகள் ஊழியர்கள் பலரை பணயக்கைதிகளாக பிடித்தவாறு அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ள அதேசமயம் சிலரை கைதுசெய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மிகவும் ஆபத்தான குற்றவாளியொருவன் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளதை தொடர்ந்து ஈக்குவடோரில் 60 நாள் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொலைக்காட்சி நேரலையில் திடீரென நுழைந்த ஆயுததாரிகளால் அதிர்ச்சி! | Shocked By Armed Suddenly Entered Live Tv Ecuador

எனினும் ஆபத்தான குற்றவாளிதப்பியோடிய சம்பவத்திற்கும் தொலைக்காட்சி நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தொலைக்காட்சி நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் பணியாளர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துவதை காண்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் எங்களை கொலை செய்ய வந்துள்ளனர் கடவுளே இது இடம்பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள் குற்றவாளி நேரலையில் உள்ளான் என ஊழியர் ஒருவர் வட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.