கிளீன் ஷேவ் லுக்கில் நடிகர் விஜய்: படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள்

0
157

வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT படத்திற்காக நடிகர் விஜய் கிளீன் ஷேவ் லுக்கில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

‘தி கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவளத்தில் பிரம்மாண்ட வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி வரை கோவளத்தில் நடைபெறும் என்றும் அதன் பின்னர் ராஜஸ்தானில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் அவரை பார்க்க குவிந்தனர். இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை கண்டு ஆர்ப்பரித்த ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்தார்.

தாடி, மீசை எதுவும் இல்லாமல் இளைஞர் போன்று விஜய் இருக்கும் இந்த காணொளியை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.