முன்னாள் ஆஸ்டன் வில்லா நட்சத்திரம் கேபி அக்போன்லஹோர் தனது 11 வயது மருமகள் உயிரிழந்ததை வெளிப்படுத்தியுள்ளார். ஜெய்லா அக்போன்லஹோர் மூளைக் கோளாறுடன் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டன் கோல்ட்ஃபீல்டைச் சேர்ந்த ஜெய்லா, நடக்கவோ பேசவோ முடியாத நிலையில் இருந்ததால் ஒரு குழாய் மூலம் அவருக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜெய்லா நான்கு வயதுக்கு மேல் வாழ மாட்டாள் என்று வைத்தியர்கள் முன்னரே கூறியிருந்தனர். ஸ்ட்ரைக்கர் கேபி இன்று இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு அவர் இறந்த செய்தியை தெரிவித்தார்.

“இப்போது சொர்க்கத்தில் ஓய்வெடுங்கள் என் அழகான மருமகள் ஜெய்லா. “இந்தக் கொடுமையான உலகில் நீ அனுபவித்தது போதும்! நான் உன்னை நேசிக்கிறேன். பலர் எப்போதும் உன்னை நேசிப்பார்கள்!. இன்று நீ கடைசி மூச்சை விடுவதைப் பார்த்து நான் உடைந்து போனேன். விரைவில் சந்திப்போம்” என்று அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.