என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம்

0
246

பிரித்தானியாவில் உணவு விஷமானதால் பெண்ணொருவர் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், ஒரு மாதம் கழித்து உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.

கெல்லி க்ளீஸன்

கிரேட்டர் மான்செஸ்டரின் ஸ்டாக்போர்ட் நகரைச் சேர்ந்தவர் கெல்லி க்ளீஸன்(40). இவர் கடந்த மாதம் 29ஆம் திகதி படுக்கையில் இறந்துகிடந்தார்.

அவர் உண்ட உணவு விஷமானதால் (Food Poisoning) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் நம்பினர். எனினும் கெல்லியின் மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்தது. அவர் இறந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது இறப்பிற்கான உண்மைக் காரணம் தெரிய வந்துள்ளது.

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் | Mystery Exposed 40 Old Death Woman After Month

மரணத்திற்கான காரணம்

அதாவது, Pulmonary embolism என்ற பாதிப்பினால் தான் கெல்லி மரணமடைந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் தமனியில் ரத்த உறைவு ஏற்பட்டு, நுரையீரலின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் இது நிகழ்கிறது.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். திடீர் மூச்சுத் திணறல், மார்பு வலி, இருமல் மற்றும் ரத்த வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் உருக்கம்

கெல்லியின் கணவர் ஜெர்ரி க்ளீசன் மனைவியின் இறப்பு குறித்து கூறுகையில், ‘நான் முற்றிலும் பேரழிவுக்கு உள்ளாகிவிட்டேன். டிசம்பர் 29, வியாழன் அன்று என் அழகான மனைவி இறந்துவிட்டார். மேலும் நான் உடைந்துவிட்டேன் என்று கூறுவது ஒரு குறையாக உள்ளது.

22 அற்புதமான ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக இருந்தோம். நான் உன்னை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை. நம் பெண் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என உறுதியளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கதறும் மகள்

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் | Mystery Exposed 40 Old Death Woman After Month

மேலும், கெல்லியின் 17 வயது மகள் மேடிசன் கூறுகையில், ‘என் அம்மா எனது சிறந்த தோழி. நாங்கள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஒன்றாக செய்தோம். அவள் எனக்காக எல்லாவற்றையும் செய்தாள். நான் விரும்பிய அனைத்தையும் வாங்கித் தந்தாள். எனவே, இந்த உதவியை திருப்பி செலுத்த மற்றும் சிறப்பாக அவளை வழி அனுப்பி வைக்க வேண்டிய நேரம் இது’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.