‘அதிக ஊழியத்துக்காக மோசடி செய்த இளவரசி டயானா?’: வெளியான தகவலால் வைரலான புகைப்படம்

0
35

உலகில் தலைசிறந்த தலைவர்கள் வாழ்ந்து மறைந்தாலும் இன்று வரை பலர் மக்களால் கொண்டாடப்படுகின்றனர். அந்தவகையில் இளவரசி டயானா உலகின் மிகவும் பிரபலமான பெண்களில் ஒருவராக கருதப்பட்டார். இவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தாலும் அவரை பற்றிய பல வியக்கவைக்கும் விடயங்கள் இடையிடையே வெளியாகி வைரலாகும். ஆனால் இந்த முறையோ அவர் பற்றி வெளியாகியுள்ள தகவலானது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

குழந்தை பராமரிப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்த இளவரசி

அரச குடும்பத்துக்குள் நுழைவதற்கு முன்னதாக இளவரசி டயானா குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றின் வேலை வாய்ப்பிற்காக 1979ஆம் விண்ணப்பித்துள்ளார்.

குறித்த விண்ணப்பம் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு அது தொடர்பான விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

வெறும் 17 வயதான டயானா, தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பிறந்த ஆண்டு தொடர்பில் மோசடி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒப்பந்த விண்ணப்பம் வெளியீடு

இளவரசி டயானாவால் நிரப்பட்ட ஒப்பந்தம் ஒன்றில் அவர் தன்னுடைய பிறந்த தினமான 1961ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதியை 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1ஆம் திகதி என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இளவரசி டயானா தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தாரா என சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்படுகின்றது.

இது தொடர்பாக இளவரசி டயானா விண்ணப்பித்த தொண்டு நிறுவனத்தின் அதிகாரி ஸ்டொவ் என்பவர் கருத்து தெரிவிக்கும் போது,

எங்களுடைய தொண்டு நிறுவனத்தில் கடமையாற்றுபவர்கள் எப்போதும் வயது முதிர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதை நாம் எதிர்பார்ப்போம். இதனால் அங்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, வேலை செய்யும் காலங்களில் அதிக ஊதியம் கிடைக்க வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

குறித்த ஆவணம், இளவரசி டயானாவின் குழந்தை பராமரிப்பாளர் பணிக்கான முதல் அதிகாரப்பூர்வ பணி ஒப்பந்தமாக கருதப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக தன்னை அதிக வயதுள்ளவர் என காண்பிப்பதற்காக டயானா தனது பிறந்த திகதியை மாற்றி குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.