யாழில் பெண்கள் பாடசாலைகளில் பணமோசடி; அம்பலமாகிய உண்மை!

0
81

வடமாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இலவச ஆங்கில பாட வகுப்புக்கு பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

யாழ் நகரை அண்டியுள்ள மாகாண பெண்கள் பாடசாலைகள் இரண்டிலும் வடமாகாண கல்வி அமைச்சின் இலவச ஆங்கில பாட வகுப்புக்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு நடத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் மேற்படி ஆங்கில பாட வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களிடம் மேற்படி இரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு மாணவியிடமிருந்து சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் விசாரணைகளல் அம்பலமாகியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலைகளின் நிறுவன மயப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் அந்த பணம் வைப்பிலிடப்பட்டு அதிபர்கள் அதனை கையாண்டுள்ளனர்.

இவ்வாறு பாடசாலை மாணவர்களிடம் உயர்தர மாணவர்களிடம் ஏற்கனவே பணம் வசூலித்தமை தொடர்பாக இந்த பாடசாலைகள் மீது விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் மீண்டும் ஆங்கில வகுப்புக்கு பணம் பெறப்பட்டுள்ளது.

யாழில் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற மோசடி; அம்பலமாகிய சம்பவம்! | Fraud In Girls School In Yali The Exposed

இந்த விடயத்தில் வலய கல்வி பணிமனைக்கும் தொடர்புள்ளதா? என ஆசிரியர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக யாழ்.வலயக் கல்வி பணிமனையுடன் தொடர்பு கொண்ட போது தமது பெயரை குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியதுடன் முறையான விசாரணைகள் இடம்பெற்று அறிக்கை சமர்பிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.