கள்ளக்காதல் இல்லை; மறுக்கும் எலோன் மஸ்க்!

0
148

கூகளின் இணை நிறுவனர் செர்கேய் பிரினின் (Sergey Brin) மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபடவில்லை என்று Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) கூறியுள்ளார்.

நிக்கோல் ஷனஹானுடன் (Nicole Shanahan) அவர் சிறிது காலம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக Wall Street Journal செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

கள்ளக்காதலால் பிரின் மனைவியிடமிருந்து மணவிலக்கு கோரியதாகவும் எலோன் மஸ்க்குடன் (Elon Musk) நட்பைத் துண்டித்ததாகவும் கூறப்பட்டது.

கள்ளக்காதல் இல்லை ; மறுக்கும் எலோன் மஸ்க்! | No Plagiarism Elon Musk Refuses

எலோன் மஸ்கின் (Elon Musk) நிறுவனங்களில் உள்ள தனிப்பட்ட முதலீடுகளை விற்கும்படியும் பிரின் தம்முடைய ஆலோசகர்களிடம் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் “செர்கேய்யும் நானும் நண்பர்கள். இருவரும் நேற்றிரவு விருந்தில் ஒன்றாகக் கலந்துகொண்டோம். நிக்கோலை நான் கடந்த மூவாண்டில் இரண்டு முறை மட்டுமே பார்த்தேன். அப்போது மற்றவர்களும் கூட இருந்தனர்.” என்று மஸ்க் (Elon Musk) டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.