செஸ் விளையாடும் சிறுவனின் விரலை உடைத்த ரோபோ!

0
185

ரஸ்யாவில் ரோபோ ஒன்று தன்னுடன் செஸ் விளையாடிய சிறுவனின் விரலை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொஸ்கோ செஸ் ஒன்றியத்தின் தலைவர் செர்ஜே லாசாரேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மொஸ்கோ செஸ் ஓபன் போட்டித் தொடரில் சிறுவனிற்கு இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ரோபா நீண்ட காலமாக செஸ் போட்டிகளில் விளையாடி வருவதாகவும் தமது ஒன்றியத்தினால் இந்த ரோபா வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு காயை நகர்த்தியதன் பின்னர் சிறுவன் ரோபோவிற்கு காய் நகர்த்த கால அவகாசம் வழங்காது விட்டதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விரல் முறிந்த நிலையிலும் அதற்கு கட்டுப் போட்டுக் கொண்டு மறுநாள் சிறுவன் போட்டியில் தொடர்ந்தும் பங்குபற்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் மீளவும் இடம்பெறுவதனை தடுக்கும் வகையில் சில பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவனின் விரலை பிடித்து முறித்த ரோபோவிடமிருந்து அருகாமையில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர்.