ரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்!

0
305
attack Toronto area tamil news

கனடாவில், ரொறன்ரோ தேவாலயத்திற்கு வெளியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். attack Toronto area tamil news

இந்த சம்பவம், St. James Cathedral பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 17 வயதான பெண் ஒருவரும், 22 வயதான ஆண் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அப்பகுதியால் சென்ற ஒருவர், இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு சென்றபோது, அவர்கள் தலையில் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும், பின்னர் உடனடியாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- attack Toronto area tamil news

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்