கனடாவில், தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தி இடம்பெற்ற சூட்டு சம்பவம்!

0
325
shooting incident Canada using banned guns

தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இருவரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர். shooting incident Canada using banned guns

சனிக்கிழமை, Etobicoke பகுதியில் குடி போதையில் இருந்த குறித்த இருவரும், சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் மீது துப்பாக்கியால் இரு முறை சுட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார், அவர்களை கைது செய்திருந்ததுடன், அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச்சம்பவத்தில் 39 வயதுடைய Inderpaul Flora மற்றும் 18 வயதான Justin Singh ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் Flora என்பவர் மீது இரு வேறு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் உட்பட 10 குற்றச்சாட்டுகளும், Justin Singh என்பவர் மீது 3 குற்றச்சாட்டுக்களும் முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 1993ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ 101 கலிபோர்னியாவில், தடை செய்யப்பட்ட Tec-9 வகை துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் உயிரிழந்திருந்தனர். அத்துடன் கொலம்பைன் உயர்நிலை பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கூட்டாட்சி அரசாங்கம் 1994 முதல் 2004 வரையான காலப்பகுதிகளில் இந்த துப்பாக்கியை தடை செய்திருந்த நிலையில், அதனை கனடா அரசும் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- shooting incident Canada using banned guns

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்