முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி

0
1018
not patriotism oppose Muslims

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் விடயத்தை முன்நிறுத்தி போராட்டம் நடத்தியும், முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டி விடுவதற்கும் சிலர் முயற்சிப்பதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளர். (not patriotism oppose Muslims)

வடக்கிற்கு எதிராக தெற்கில் இருந்து குரல் எழுப்பியும் தேசப்பற்றை வெளிப்படுத்தவும் வடமாகாணத்தை தெற்கில் இருந்து எதிர்ப்பதும், சிங்கள மக்கள் முஸ்லிம்களை எதிர்ப்பதும் தேசப்பற்றாக அமையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் சீன துறைமுக பொறியிலாளர் நிறுவனத்தினால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 7.6 மில்லியன் டொலர்கள் நிதி வழங்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்த விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசப்பற்று என்ற விடயத்தை வலியுறுத்தி கோஷம் எழுப்புகின்றவர்கள் நாட்டின் இறைமையை கேள்விக்குறியாக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் அதீத கடன்களின் மூலம் இலங்கையின் இறைமையை பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,

இலங்கை தற்போது பொருளாதார இறைமையை போராடி மீளப் பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; not patriotism oppose Muslims